2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

உழவர் கௌரவிப்பும் பொங்கல் விழாவும்

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


உழவர் கௌரவிப்பும் பொங்கல் விழாவும் ஆலையவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் மன்ற கட்டடத்தில் இன்று சனிக்கிழமை (17) நடைபெற்றது.

மன்றத்தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் க.கனகரெத்தினம் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேற்றில் கால் வைத்தால் மாத்திரம் நாம் சோற்றில் கை வைக்கலாம் எனும் முதுமொழிக்கமைய உழவுத் தொழிலை மேற்கொண்டு வருபவரும் மன்ற உறுப்பினருமான க.கார்த்திகேசு பொன்னாடை போர்த்தி  கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கான வாழ்த்துப்பாவும் கையளிக்கப்பட்டது.

அத்தோடு எதிர்வரும் காலங்களில் நாட்டின் அபிவிருத்தியில் முதுகெலும்பாக செயற்படும் அதிகளவான உழவர்களும் கௌரவிக்கப்படவுள்ளதாக மன்ற செயலாளர் ஸ்ரீ மணிவண்ணன் தெரிவித்தார்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X