2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஏ.ரீ.எம் அட்டை மோசடிசெய்து பணம் பெற்ற இருவர் கைது

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருக்கோவில் பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஏ.ரீ.எம் அட்டையை எடுத்து அதனூடாக வங்கியில் பணத்தை எடுத்து வந்த 4 இளைஞர்களில் தலைமறைவாகி வந்த இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (16) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.அமீர் தெரிவித்தார்.

இந்த 4 இளைஞர்களில் இருவர் கடந்த 14ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,  

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்துள்ளார்.

இவர் கடந்த 12ஆம் திகதி; சந்தைக்கு சென்றபோது அவரது கைப்பை காணாமல் போயுள்ளது இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந் நிலையில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள்  காணாமல் போனஇலத்திரணியல் அட்டையை பயன்படுத்தி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடியக எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த இருவரை 14ஆம் திகதி இருவரை கைது செய்யப்பட்டனர்

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் 9 ஆயிரம் ரூபாவை வங்கில் எடுத்துள்ளதுடன் மற்றைய இருவரும் 40 ஆயிரம் ரூபாவை எடுத்துள்ளதாக ஆரம்பவிசாரணையில் தெரியவந்தது.

இவ் இருவரையும் 15ஆம் திகதி பொத்துவில் நீதவான் ஜ.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்திய போது இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X