2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

யானை தாக்குதலில் வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் காயம்

Kogilavani   / 2015 ஜனவரி 18 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

கிராமத்தினுள் புகுந்த யானையை துரத்தும் முயற்சியில் ஈடுபட்ட வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை, திருக்கோவில் தாண்டியடியில் இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், 57 வயதுடைய வி.எம்.டபிள்யு.நவரெத்தின என்பவரே காயமடைந்த நிலையில், பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானையொன்று நேற்று காலை 6 மணியளவில், கிராமத்தினுள் புகுந்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை காட்டுக்கு துரத்தும் முயற்சியில் ஈடுபட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி அதிகாரி அதிஷ்டவசமாக உயிர்தப்பியதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X