2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

உத்தரவாத விலையில் நெல்லை பெறுமாறு விவசாயிகள் கோரிக்கை

Kogilavani   / 2015 ஜனவரி 18 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

விவசாயிகளிடமிருந்து நெல்லை அரசாங்கம், உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டுமெனவும் பெரும்போகத்தில் நஷ்டத்தினை எதிர்கொண்டு வரும் விவசாயிகளுக்கு புதிய அரசாங்கம் நஷ்ட ஈட்டை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்;;;;கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மஹா போக நெல் அறுவடை நடைபெற்று வருகின்ற நிலையில் மிகக் குறைந்த விளைச்சலே கிடைத்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் சாதாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 40 மூடைகள் விளைச்சல் கிடைக்கும். தற்போது நெல் வயல்களில் 20 தொடக்கம் 25 மூடைகள் வரையிலான விளைச்சலே கிடைத்து வருவதாகவும் இதனால் தாம் பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் கணிசமான அளவு நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதனாலேயே நெல் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நெல்லை உத்தரவாத விலைக்க பெறுமாறு விவசாயிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X