2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

திவிநெகும வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவி

Sudharshini   / 2015 ஜனவரி 18 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட, திவிநெகும வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(18) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

திவிநெகு திணைக்களத்தின் 15 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு 10,000 ரூபாய்  பெறுமதியிலான, 3,000 கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கோழி வளர்பில் ஆர்வமுள்ள பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு கோழி வளர்ப்பு தொடர்பிலான ஆலோசனைகள், இலவச மருத்துவ உதவிகள் ஆகியவற்றை மிருக வைத்திய பணிமனையினூடாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திவிநெகு திணைக்களத்தின் ஊடாக, பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திவிநெகு கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மிருக வைத்திய அதிகாரி எம்.ஏ.நதீர், தலமைப்பீட திவிநெகும முகாமையாளர் எம்.சி.எம். தஸ்லீம் மற்றும் திவிநெகும அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X