2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் மீள் இணைப்பு

Gavitha   / 2015 ஜனவரி 19 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தீகவாபி, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி ஆகிய கிராமங்களைச்சேர்ந்த பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மற்றும் வறிய மாணவர்கள் 25 பேருக்கு சுமார் 1500ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி மீண்டும் அவர்களை பாடசாலையில் இணைக்கும் வேலைத்திட்டம், திங்கட்கிழமை (19) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு மற்றும் உள, சமூக உத்தியோகஸ்தர் எம்.எச்.ஏ.றிபாஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இவர்களில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 09 மாணவர்கள் அடங்குவர். அவர்கள் பாடசாலைகளில் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இந்நிகழ்வின் போது, கல்வியின் அவசியம், பெற்றோர்களின் பொறுப்புக்கள், சிறுவர்களின் பாதுகாப்பு, சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில், பிரதேச செயலாளரினால் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதியசயராஜ், அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X