2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வீதி புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்

Thipaan   / 2015 ஜனவரி 20 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழைய தோம்புதர் வீதி புனர்நிர்மாணம் செய்யப்படாமல் உள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட 'தேசத்துக்கு மகுடம்' வேலைத் திட்டத்தின் கீழ், உள்ளூர் வீதிகள் யாவும் கொங்றீட் வீதிகளாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டன. ஆனால் தோம்புதர் வீதி புனர்நிர்மாணம் செய்யப்படவில்லை.

கல்யாண வீதியிலிருந்து குறுக்கே செல்லும் இந்த உள்வீதியில் வடிகான் வசதியும் இல்லை. எனவே வீடுகளின் கழிவு நீர் இவ்வீதியில் விடப்படுவதால் சூழல் மாசடையும் நிலை காணப்படுகின்றது. மழை காலங்களில் இவ்வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு தசாப்பதங்களுக்கு முன் இவ்வீதியில் ஒரு வடிகாண் அமைப்புக் காணப்பட்டது. தற்போது அதனுடைய அடையாளமும் இல்லாமல் இருக்கின்றது என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கவனம் எடுக்குமாறு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X