2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஆலையடிவேம்பில் 4 கோவில்களில் திருட்டு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 21 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்,வி.சுகிர்தகுமார் 

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 4 கோவில்களில்  செவ்வாய்க்கிழமை (20) நள்ளிரவு திருட்டுச் சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீவம்மியடிப்பிள்ளையார் கோவில்,  ஸ்ரீமுத்துமார்pயம்மன் கோவில், ஸ்ரீமுருகன் கோவில், ஸ்ரீவீரம்மாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலேயே இந்த திருட்டுச் சம்பவங்கள்; இடம்பெற்றுள்ளன.   

ஸ்ரீவம்மியடிப்பிள்ளையார் கோவிலின் பின்கதவு பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், காரியாலயம் மற்றும்  குருமார்கள் தங்கும் இடங்களின் கதவுகளின் பூட்டுக்களையும் உடைத்துள்ளனர்.

பின்னர், காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமாரியை உடைத்து அதனுள்ளிருந்து உண்டியல் பணம் 26,000 ரூபாய் மற்றும்  கோவில் புனருத்தானத்துக்கான பணம் 87,000 ரூபாய் உட்பட 4 ஒலிவாங்கிகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாரிடம் மேற்படி கோவில் தலைவர் நா.அழகரெத்தினம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

ஸ்ரீமுருகன் கோவில் மற்றும்  ஸ்ரீவீரம்மாகாளியம்மன் கோவில் மூலஸ்தானங்களுக்குள்  திருடர்கள் நுழைந்துள்ளதாகவும் இதன்போது சிறியதொகை  பணத்தை தவிர, வேறு எதுவும் திருட்டுப் போகவில்லை எனவும் மேற்படி கோவில்களின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில்  அக்கரைப்பற்று பொலிஸாரிடம் கோவில் நிர்வாகத்தினர்; முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சம்பவ இடங்களுக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X