2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வருடாந்த மீளாய்வு கூட்டம்

Kogilavani   / 2015 ஜனவரி 21 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையின் வருடாந்த மீளாய்வும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் வைத்தியசாலையின் வளர்ச்சிக்கும், நற்பெயருக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஊழியர்கள் கௌரவிப்பும் செவ்வாய்க்கிழமை(20) வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.


வைத்திய அத்தியட்சகர் கே.எல்.நக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுடீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், குறைபாடுகள், வளர்ச்சிகள் பற்றியும், நடப்பாண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.


இதேவேளை அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய 12 ஊழியர்கள் அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X