2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

திருக்கோவில் சுகாதார வைத்திய அலுவலகத்துக்கு முதல் முன்று இடங்கள்

Kanagaraj   / 2015 ஜனவரி 21 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு


2014ஆம் ஆண்டுக்கான தாய், சேய் நல சேவைக்கான போட்டியில் திருக்கோவில் சுகாதார வைத்திய காரியாலய உத்தியோகஸ்தர்கள் மூவருக்கு கல்முனை பிராந்திய மட்டத்தில் முதல் மூன்று விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திருக்கோவில் சுகாதார வைத்திய அலுவலக அதிகாரி வைத்தியர் அமரசேன உதயசூரியா தெரிவித்தார். 


அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய காரியாலய அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கிடையில் இப்போட்டி நடத்தப்பட்டது. 


தாய், சேய் நல சேவைக்கான போட்டியில் வெற்றி பெற்ற உத்தியோகஸ்தர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் அதன் பணிப்பாளர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றது.


திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய காரியாலயத்தில் பணிபுரியும் பொது சுகாதார தாதியர் சகோதரி கந்தப்பன் சிவமலர், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கணபதிப்பிள்ளை லோகிதகுமார் மற்றும் பொது சுகாதார மருத்துவர் திருமதி அகிலநந்தனி சசிதரன் ஆகியோர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் நடத்தப்பட்ட சேவையாளர்களுக்கிடையிலான போட்டியில் மூவரும் முதலாம் இடங்களை பெற்றுள்ளனர்.


இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுடீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தாய், சேய் நல வைத்தியர் எம்.ஏ.சி.எம்.பஷால் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X