2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

குடிநீரை பெற்றுத் தருமாறு கோரிக்கை

Sudharshini   / 2015 ஜனவரி 24 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இலுக்குச்சேனை மற்றும் பறகத் நகர் ஆகிய கிராமங்களுக்கு குடிநீரை வழங்குவதுக்கு நடவடிக்கை எடுக்குமாறு, நகர அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், கோரிக்கை விடுத்துள்ளதாக வெள்ளிக்கிழமை (23) அக்கரைப்பற்று பிரதேச சபையின் எதிர்க்கட்சித்தலைவர் எச்.ஜே.எம். இன்ஹாம் தெரிவித்தார்.


கடந்த 43 வருடங்களாக இக்கிராமத்தில் வாழும் மக்கள் குடிநீருக்காக பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இதனால், வயோதிபர்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் குடிநீரைப்பெற்று கொள்ள பல மைல் தூரம் செல்லவேண்டிய நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எனவே, இலுக்குச்சேனைத் திடல் கிராமத்துக்கும் பறகத் நகர் கிராமத்துக்கும் பிரதான நீர்க்குழாயினைப் பொருத்தி நீர் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதேச சபை உறுப்பினர் எச்.ஜே.எம். இன்ஹாம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X