2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இறந்த நிலையில் யானை மீட்பு

Thipaan   / 2015 ஜனவரி 24 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொட்டயான்டவெளியில் உள்ள குளத்துக்கு அருகில் யானை ஒன்று சூட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் இன்று காலை (24) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9மணிக்கு பிற்பாடே யானை சுடப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சுடப்பட்ட யானை பிரதேச மக்களை அச்சுறுத்தியதுடன் விவசாய நிலங்களையும் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் யானை வெடி மூலம் அதனை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X