2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இலவச நடமாடும் சேவை

Sudharshini   / 2015 ஜனவரி 24 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள மக்களின் நலன் கருதி, அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடைப் பொலிஸாரின் ஏற்பாட்டில் சவளக்கடைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். நஜீம் தலைமையில் இலவச நடமாடும் சேவை 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது


இந்நடமாடும் சேவையில் பொலிஸ் முறைப்பாட்டுச் சேவை, பொது வைத்திய பரிசோதனை, பல்வைத்திய சேவை, தேசிய அடையாள அட்டை வழங்கள், ஆயர்வேதம் வைத்திய சேவைகள், தொலைபேசி; சேவைகள் என்பன வழங்கப்பட்டன.


மேலும், இந்நடமாடும் சேவையினை ஒட்டி அப்பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் 6 பேர் கொண்ட கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி கடந்த 22ஆம் திகதி தொடக்கம் நடைபெற்றது.


வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாவிதன்வெளிப் பிரதேச செயலாளர் சு.கரன், கலைமகள் வித்தியாலய அதிபர் சீ.பாலசிங்கம், வேப்பையடி வைத்தியசாலை வைத்தியர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X