2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'எந்தவித அச்சமும் இன்றி பிரச்சினைகளை முறையிடவேண்டும்'

Thipaan   / 2015 ஜனவரி 25 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

பொதுமக்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி தங்கள் பிரிவுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக்கான பொலிஸாரை நாடி அல்லது பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாக வந்து தங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் சம்மந்தமாக முறைப்பாடு செய்யவேண்டும் என திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.யு.வி. உதயன தென்னக்கோன், சனிக்கிழமை (24)  தெரிவித்துள்ளார்.

திருக்கோவில்- 04 காயத்திரி கிராமத்தில், பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்து வைப்பதற்காக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கிராமங்களில் சட்டவிரோத மதுவிற்பனை, போதைப் பொருள் பாவனைகள், துஷ்பிரயோகங்கள் உட்பட பல்வேறு சட்டவிரோத செய்ற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இவற்றை தடுத்து சமூகத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் தமது கடமைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அத்துடன் தங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் சம்மந்தமாக நீங்கள் எந்தவிதமான சந்தேகமும் இன்றி பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்கு உடனடிதீர்வுகள் காணக்கூடியதாக அமைவதுடன் பாரதுரமான வன்முறைகள் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளவும் முடியும்.

எனவே பொதுமக்கள் தங்களில் கிராமங்களில் மற்றும் தங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் சம்மந்தமாக பொலிஸாரை நாடி அதற்கான தீர்வுகளை  பெற்றுக் கொள்ள   முயற்சிக்கவேண்டும்.

இதனால் வன்முறைகளை தவிர்த்துக் கொண்டு சமூகத்தில் அனைவரும் அமைதியாக வாழமுடியும் என்றார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் பொலிஸ் நிலையபெரும் குற்றப் பொறுப்பதிகாரி எஸ்.எம.அமீர், போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.ஏ.என்.எதயசாந்த மற்றும் கிராமசேவகர்கள், அரச அதிகாரிகளும்  கலந்துகொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X