2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அரச உத்தியோகஸ்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

Thipaan   / 2015 ஜனவரி 25 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மதங்களுக்கிடையே சௌஜனியத்தை ஏற்படுத்துமுகமாக மனித உரிமைகள் கற்கை நெறி நிலையம், இனத்துவ கற்கை நெறிக்கான சர்வதேச நிலையம் என்பவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25)  நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் அட்டாளைச்சேனை பிரதி கோட்ட கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.கித்ர் முஹம்மட் வளவளாளராக கலந்து கொண்டார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள அரச உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
சமூங்களிடையே எவ்வாறு ஒற்றுமையை வளர்த்தல், மதச் சுதந்திரம், இன உறவு தொடர்பான எவ்வாறான வழிவகைகளை ஏற்பாடுசெய்தல் போன்ற தலைப்புகளில் விரிவுரைகள் நடைபெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X