2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தடையை நீக்கக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 ஜனவரி 26 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, பொத்துவில் பிரதேச கரைவலை மீனவர்களுக்கு கடற்தொழிலில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தடையை நீக்கக் கோரி, திங்கட்கிழமை(26) பொத்துவில் பிரதேச கரைவலை மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பொத்துவில் மாதல் மீனவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பதாதைகள் ஏந்தியவாறு கடற்கரை 20 வீட்டுத்திட்டத்திலிருந்து பிரதேச செயலகமவiர் சென்றதுடன் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத்திடம்  மகஜரெர்னையும் கையளித்தனர்.


ஏழை மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே, இன முறண்பாட்டை தோற்றுவிக்காதே, எமது கடல் எமக்குச் சொந்தம், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலையிட்டு பிரச்சினைகளை உடன் தீர்க்கவும், எமது மரபுரீதியான தொழிலில் கை வைக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள், பெனர்களுடன் கோசங்கள் எழுப்பி மீனவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.


இதுதொடர்பில் மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.எல்.சஹாப்தீன் கருத்து தெரிவிக்கையில்,


'கடந்த முப்பது வருடங்களாக இப்பிரதேசத்தைச் சேர்ந்த 600 மீனவர்கள் கரைவலை தொழிலில் ஈடுபட்டு சுமார் 1500 பேர் வாழ்வாதார உதவிகளையும், ஜீவனோபாயத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். இக்கால கட்டத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சில நாட்களில் கரைவலை கடற்தொழில் செய்வதற்கான தடையை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.


அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவருக்கு உரிய முறைப்படி பதிவுகள், அனுமதிப்பதிரங்கள் வழங்கி கரைவலை கடற்றொழில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை ஏனைய ஏழை மீனவர்கள் உரிய முறையிலான அனுமதியை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கடந்த அரசாங்கத்தினால் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தது.


இருந்தபோதிலும் தற்காலிகமான முறையில் கடற்தொழில் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் 99 வீதமான பொத்துவில் பிரதேச மக்கள் வாக்களித்த போதிலும் அந்த நம்பிக்கை அதிகாரிகளினதும் தற்போதுள்ள கடற்தொழில் பிரதி அமைச்சரினதும் இனவாத செயற்பாடுகளினால்; தூரமாக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான தடையினால் சென்ற பத்து நாட்களாக 600க்கும் மேற்பட்ட கரைவலை தொழிலாளர்கள் எந்தவித வருமானமுமின்றி நடுத்தெருவில் நிற்கும் பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே ஏழை மீனவர்களின் நலன் கருதி கடற்தொழிலுக்கான அனுமதியை முறைப்படி வழங்குவதற்கு அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுப்பதுடன் உரிய வர்தமாணி அறிவித்தல் செய்யும் வரையில் தற்காலிகமாக தாம் செய்து வந்த கடற்தொழிலை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான அனுமதியை ஜனாதிபதி அவர்கள் துரிதமாக வழங்க வேண்டுமென்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதிக்கான மகஜரை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.


இதற்கான தீர்வு வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்யப்படுமாயின் பாரியளவிலான உண்ணாவிரதப் போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென மீனவர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X