2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகள்

Administrator   / 2015 ஜனவரி 27 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார முயற்சிக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (26) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

கல்முனை மாற்றுத்திறனாளிகள் மறுமலர்சி அமைப்பின் அங்கத்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 150,000 ரூபாய் நிதியின் மூலம் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு, வாழ்வாதார முன்னெடுப்பு முயற்சிக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.ஹரீஸ் இதனை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிராம நிர்வாக உத்தியோகஸ்தர் எ.எச்.எ.லாஹிர், சமூக சேவை உத்தியோகஸ்தர்  ரி.அன்சார், பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X