2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Administrator   / 2015 ஜனவரி 28 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.கே. ரஹ்மத்துல்லா


கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் இஸட். ஏ. எச்.ரஹ்மானை, பெப்ரவரி 11ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பி யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.


தனிநபரொருவரை தாக்கியது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட ஆணையை மதிக்காமல்  நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் அவர் தேடப்பட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையிலேயே அம்பாறை குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X