2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 ஜனவரி 30 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 6ஆம் கட்டை பறகத் நகரில் சமீபத்தில் 25 இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீதியில் போக்குவரத்து செய்யாத நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் எச்.ஜே.எம்.இன்ஹாம், வியாழக்கிழமை (29) தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கற்களைப் பதித்து புதிய வீதியாக நிர்மாணிக்கப்பட்ட இவ்வீதி, உரிய மண்போட்டு பதப்படுத்தாமலும் பாய்ச்சல் வடிச்சலுக்கான பொருத்தமான குழாய் இடாமலும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, இவ்வீதியை செப்பனிட உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச சபை உறுப்பினர் எச்.ஜே.எம்.இன்ஹாம் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X