2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சந்தை கட்டட புனருத்தான பணிகள் கைவிடப்பட்டமையால் மீனவர்கள் அசௌகரியம்

Thipaan   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

பனங்காட்டு கிராம மீனவர் சந்தை கட்டட புனருத்தான பணிகள் கைவிடப்பட்டமையால் தாம்  வீதியோர மரநிழல்களில் விற்பனையில் ஈடுபடுவதாக மீனவர்கள் விசனம் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பனங்காட்டு கிராமத்தில் அமைந்துள்ள மீனவர் கட்டட புனருத்தான பணிகளே இவ்வாறு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.

இக்கட்டடமானது கடந்த வருடம் ஏற்பட்ட சுழிக்காற்றினால் கூரைகள் உடைந்து சிறிய சேதத்துக்குள்ளானது.

இருப்பினும் சேதமாகாத பகுதியை தாங்கள்; பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதன் பிற்பாடு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதி ஒதுக்கீட்டில் கட்டடம் புனரமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டு கட்டடத்தின் கூரைகள் முற்றாக அகற்றப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனாலும் அவ்வாறு ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் குறித்த சில நாட்களுக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறினர்.

மேலும் வெயில் காலங்களில் மரநிழல்களில் மீன் விற்பனையில் ஈடுபட்டாலும் மழை காலங்களில் சிரமத்துக்;குள்ளாகுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, பொறுப்புடையவர்கள் உடன் தலையிட்டு கட்டடத்தை பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X