2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மின்னல் தாக்குதலுக்குள்ளானவர் வைத்தியசாலையில்

Gavitha   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டம், கொச்சிக்காச்சேனை பகுதியில் இன்று (03) காலை வயலுக்கு சென்ற 4 பிள்ளைகளின் தந்தையொருவர் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கறைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 2ஆம் பிரிவில் வசிக்கும் எச்.எல்.செய்னுபாப்தீன் என்பவரே  இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் நிலைமை கலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X