2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கடலில் மூழ்கி இராணுவ வீரர் உயிரிழப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ.தாஜகான்


பொத்துவில் கடலில் மூழ்கி இராணுவ வீரரொருவர் செவ்வாய்க்கிழமை(3) உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். தியாத்தலாவை இராணுவ முகாமைச் சேர்ந்த லெப்டினன் பீ.ஏ.வாஸித்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர், தனது சக இராணுவ வீரர்களுடன் பொத்துவில் பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்டதுடன்   பொத்துவில் ஊரணி விஸ்கி பொயின்ட் கடலில் குளிக்கச் சென்றபோது கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.


மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர்,உயிரிழந்ததாக தெரியவருகிறது. இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X