2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சன சமூக நிலையத்தின் சிரமதான நிகழ்வு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்புக் கடற்கரை பிரதேசம் சிரமதான அடிப்படையில் தூய்மைப்படுத்தப்பட்டது.

நிலையத்தின் தலைவர் திரு. பா.செ.புவிராசா தலைமையில் இந்த சிரமதான நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை மாநகர சபை உறுப்பினர் அ.விஜயரெத்தினம் கடற்கரை அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்த 250,000 ரூபாய் நிதியிலிருந்து 15 சீமெந்து இருக்கைகளும் ஒரு இறங்குபடியும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சன சமூக நிலையத்தின் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X