2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 115 எருமைகள் மீட்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட 115 எருமைகளை வியாழக்கிழமை (5) அதிகாலை மூன்று மணியளவில் அன்னமலை விளாவடி சந்தியில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஐவரை சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.


அம்பாறை, மகாஓயா பிரதேசத்தில் இருந்து திருக்கோவில் பிரதேசத்துக்கு நாவிதன்வெளி பிரதேசம் ஊடாக அனுமதிப்பத்திரமின்றி எருமை மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக சவளக்கடை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.சாஹிர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மாடுகளை கைப்பற்றியுள்ளனர்.


இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தொடர்பாக திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் ஏறாவூரைச் சேர்ந்த இருவரும் கோளாவில்லை சேர்ந்த ஓருவரும் றிதிதென்னயைச் சேர்ந்த ஒருவரும் அடங்கலாக 5 பேர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோனின் பணிப்புரைக்கமைவாக கைப்பற்றப்பட்ட மாடுகளையும், கைது செய்யப்பட்ட நபர்களையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X