2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

புதிய சொகுசு பஸ் சேவை ஆரம்பம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்


மூதூர், கிண்ணியாவிலிருந்து கொழும்புக்கான புதிய சொகுசு பஸ் சேவையொன்று போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கினால் வெள்ளிக்கிழமை (13)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இச்சேவை தினமும் இரவு 11.00 மணிக்கு மூதூரிலிருந்து கிண்ணியா ஊடாக கொழும்பு செல்லும். கொழும்பிலிருந்து தினமும் இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகும் இச்சேவை கிண்ணியா ஊடக மூதூரை வந்தடையும்.


இச்சேவைக்காக கிண்ணியா டிப்போவுக்கு ஒரு சொகுசு பஸ்ஸூம், மூதூர் டிப்போவுக்கு ஒரு சொகுசு பஸ்ஸூம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிண்ணியா, மூதூர் ஆகிய இரு இடங்களிலும் ஆசன முன்பதிவுகளை பெற்றுக்கொள்வதற்கான முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X