2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தைக்காநகர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(15) அட்டாளைச்சேனை பல்தேவைக்கட்டத்தில் நடைபெற்றது.


மன்றத்தின் தலைவர் ஏ.எல்.அஜ்மல் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 30 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், புத்தகப்பைகள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய ரூபாய் 1200 பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இந்த நிகழ்வில் அதிபர் எம்.ஏ.கலிலுர்றஹ்மான், தைக்கா நகர் ஜூம்ஆ பள்ளிவாயல் தவைரும் ஆசிரியருமான மௌலவி எஸ்.எல்.அப்துல் றஹ்மான் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X