Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கல்முனை மாநகர சபையினால் சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவில் கல்முனை நகரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற ஐக்கிய சதுக்க நிர்மாணப் பணிகளை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் நேற்று சனிக்கிழமை (14) விஜயம் செய்து பார்வையிட்டார்.
இதன்போது, நிரம்மணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் ஆராய்ந்ததுடன் அவற்றை மேலும் துரிதப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுடன் கலந்துரையாடினார். இதில் முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக், விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர முதலமைச்சரின் கருத்திட்டத்தில் உருவான ஐக்கிய சதுக்க நிர்மாணத்திற்கான முதற்கட்ட அடிக்கல் கடந்த வருட முற்பகுதியில் நடப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள், மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் பிறந்த தினமான கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 கோடி ரூபாய் செலவிலான இத்திட்டத்தின் ஆரம்பப் பணிகளுக்காக முதல்வர் நிஸாம் காரியப்பரின் வேண்டுகோளின் பேரில் ஆசிய மன்றத்தின் கொய்கா செயற்றிட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரூபாயும் இரண்டாம் கட்டமாக வாகனத் தரிப்பிட அமைப்புக்காக 4 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய சதுக்க திட்டத்தின் கீழ் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைவதுடன் வர்த்தகத் தொகுதி, உணவகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரவு நேரத்திலும் கல்முனை நகரம் பொது மக்கள் மற்றும் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
அத்துடன் நீண்ட காலமாக மிக மோசமான நிலையில் காணப்பட்ட கல்முனை தனியார் பஸ் நிலையம் சகல வசதிகளும் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago