2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

முதிரை மரக்குற்றிகளை கடத்திய இருவர் கைது

Gavitha   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் இருந்து நான்கு முதிரை மரக்குற்றிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் திருக்கோவில் பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்தின் எல்லைப்பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மரக்குற்றிகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய நான்கு துவிச்சக்கரவண்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X