Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
'வாக்களித்த மக்களையும் கட்சியையும் உதாசீனம் செய்து பேராசையுடன் சென்றவர்களில் எமது தேசிய காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் ஆரிப்சம்சுதீனும் ஒருவராவார். இவருக்கெதிராக கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது' என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
'தேசிய அரசியலில் எமது மக்களின் கௌரவங்கள் பற்றி சிந்திப்பதே முதிர்ச்சியடைந்த அரசியல் தலைமைகளின் இலட்சணமாகும். மாறாக அமைச்சுப் பதவிகளுக்காக அடிக்கடி கட்சி மாறுவது சுயநல வயிற்றுப் பிழைப்பையே காட்டுவதாக அமையும்' என்றும் அவர் தெரிவித்தார்.
ஊர் உன்னோடுதான் எனும் தொனிப்பொருளில் அக்கரைப்பற்று மக்களால் ஏற்பாடு செய்த வரவேட்பும். பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை(15) நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஒரு காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகுவது பெரும் கஷ்டமான நிலையாகவே இருந்தது. இதற்காக தொகுதிவாரியாகவும் மாவட்டங்கள் தோறும் மக்கள் பிரதிநிதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக் குரலாக மர்ஹூம் அஸ்ரபினால் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது மக்கள் அதற்கான ஆணையை வழங்கி வந்தார்கள். இந்த கால கட்டத்தில் மு.கா.மூலமான நாடாளுமன்ற உறுப்பினர் பெறுவது மிக இலகுவானதாகவே இருந்து வந்தது.
தொடர்ந்தும் தலைமைத்துவத்தின் போக்கை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் தேசிய காங்கிரஸ எனும் கட்சியை அமைத்து மர்ஹூம் அஷ்ரப் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் சென்றேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சும் பதவிகளுக்காக வேண்டியிருந்தால் அதனை மு.காவிலிருந்து கொண்டு தலைமை செய்வதெல்லாவற்றையும் தலை அசைத்து விட்டு மிக இலகுவாக பெற்றுக் கொண்டிருந்திருக்க முடியும்.
நாடாளுமன்றமோ, அமைச்சர் பதவிகளோ எமது இலக்குகள், தேவைகள் அல்ல. அதனால்தான் பலமான அரசியல் நகர்வுகளுக்கு இறைவன் எமக்கு சந்தர்ப்பம் அளித்தான்.
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் பற்றி இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேசத்திலும் பேசப்பட்டு வருகின்றது.
வித்தியாசமானதொரு அரசியல் கலாசாரத்தை நாம் இன்று கண்டுள்ளோம். யார் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பதனை மக்களால் புரிந்து கொள்ள முடியாதளவுக்கு நிலைமைகள் உள்ளன.
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட அந்தப் பீதியின் காரணமாக இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையான வாக்குகளை புதிய ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தனர். மக்களின் அந்தப் பேரலையில் சில தலைமைகள் சந்தர்ப்பம் பார்த்து அள்ளுண்டு சென்றுள்ளனர். அவ்வாறு நாங்கள் செல்லவில்லை. மிகவும் நிதானமாகவே இப்போதும் இருக்கின்றோம்.
இன்று ஜனாதிபதி மாறி உள்ளார். சுதந்திரக்கட்சியின் தலைவரும் பொது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவருமாக புதிய ஜனாதிபதி இருக்கின்றார். நாங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தொடர்ந்து இருக்கின்றோம். 3 மாதகால அமைச்சு மட்டும்தான் நாங்கள் பெறவில்லை. மற்றைய விடயங்கள் எல்லாம் வழமைபோல் சென்று கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த நாட்டின் தலைவராக யார், யாரெல்லம் வரப்போகின்றார்கள் என்பதனை மிகவும் பொறுமையாகவும் அவதானமாகவும் முஸ்லிம் சமூகம் இருந்து நோக்க வேண்டும். யாப்பு மாற்றம் அரசியல் சீர் திருத்தங்கள் நடைபெறப் போகின்றன.
பொதுத் தேர்தலை பிற்போடுமாறு ஆலோசனையும் ஏப்ரலில் கலைக்கும் திட்டமும் சில அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரும் தீர்மானங்களும் காணப்படுவதுடன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பெரும் பரபரப்பான அரசியல் நிலையொன்றுக்கு தோன்றியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சி மாற்றத்தின் அலையில் சில மக்கள் பிரதிநிதிகளும் தமது பழைய நிலைகளை மறந்து எமக்கும் அமைச்சுப்பதவிகள் கிடைக்குமென மத்திய அரசாங்கம் முதல் மாகாண சபையிலுமுள்ள சில மக்கள் பிரதிநிதிகள் சுனாமி அலையில் அள்ளுண்டு சென்றது போன்று சென்றுவிட்டு இன்று யோசிப்பதற்கு ஆரம்பித்துள்ளனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago