2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

திராய்கேணி மக்களுக்கு வாழ்வாதர உதவிகள்

Kogilavani   / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


பல்வேறு இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட திராய்க்கேணி மக்களுக்கு ஜேர்மன் 'நம்பிக்கை ஒளி', 'உலக பசி ஒளிப்பு மன்றம' ஆகியவற்றின் நிதியில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை(16) இடம்பெற்றது.


நம்பிக்கை ஒளி அமைப்பின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.


மேலும் இந்நிகழ்வில் 'உலக பசி ஒழிப்பு மன்றத்தின்' பணிப்பாளர் எம்.அகிலன், சிரேஷ்ட ஊடகவியலாளரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரி.சஹாதேவராஜா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


'நம்பிக்கை ஒளி, உலக பசி ஒளிப்பு மன்றம்' ஆகியவை இணைந்து இலங்கையில் பல்வேறு அனர்த்தங்களால் பாதிப்புக்குள்ளான 52 கிராம மக்களுக்கு உதவும் திட்டத்தின் கீழ் காரைதீவு, அட்டப்பள்ளம், திராய்க்கேணி ஆகிய கிராமங்களிலுள்ள வசதி குறைந்த பெற்றோரின் பிள்ளைகளின் கல்விக்கு உதவுதல், விசேட திறனுடையோர்க்கு உதவுதல், பெண்களைக் குடும்பத் தலைமைகளாகக் கொண்டு இயங்கும் குடும்பங்களுக்கு உதவுதல் போன்ற 382 குடும்பங்களுக்கு இதுவரை உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


திட்டமிடப்பட்ட 52 கிராமங்களில் திராய்க்கேணி 3ஆவது கிராமமாகும். இன்னும் 49 கிராமங்களுக்கு இவ்வாறான உதவிகள் வழங்கப்படவுள்ளதாக உலக பசி ஒழிப்பு மன்றத்தின் பணிப்பாளர் எம்.அகிலன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X