2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வீதி மறியல் போராட்டம்

Gavitha   / 2015 பெப்ரவரி 17 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

தோப்பூரில் இருந்து மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்புக்குச் செல்லும் 2 கிலோமீற்றர் தூரமுடைய வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் செவ்வாய்கிழமை (17) வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் 'இவ்வீதிக்கு ஒதுக்கிய பணம் எங்கே', 'பதாகை உண்டு வீதி எங்கே' போன்ற வாசகங்களை ஏந்தியவாறு வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வீதியால் சென்ற வாகனங்களையும் செல்லவிடாது தடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மகரூப், இந்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் கதைத்து இவ்வீதியை புனரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.

மேலும் இவ்வீதிக்கு ஒதுக்கிய பணம் தொடர்பில், ஊழல் இடம் பெற்றுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது. இது சம்மந்தமாக நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.

அத்தோடு மாகாணசபை உறுப்பினரிடம் பொது மக்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சம்பவ இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X