2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விபத்தில் முதியவர் படுகாயம்

Thipaan   / 2015 மார்ச் 18 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் இன்று புதன்கிழமை(18) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் படுகாயமடைந்து நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த வயோதிபர், நிந்தவூர் வைத்தியசாலை வீதியிலிருந்து  பொதுச்சந்தைக்கு செல்வதற்காக, துவிச்சசக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்ட வேளை கல்முனையிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி வந்த டிப்பருடன் மோதுண்டு  படுகாயமடைந்துள்ளார்;.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி விபத்து இடம்பெற்றுள்ள இடத்தில் அண்மைக்காலமாக பல விபத்துச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ள நிலையிலும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X