2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நெரிசலாக மாடுகளை கொண்டுசென்ற நால்வருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 மார்ச் 18 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

நெரிசலாகவும், கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் இரண்டு லொறிகளில் 31 எருமை மாடுகளை ஏற்றி வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 04 பேரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல்,  இன்று புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.

வெல்லவாயவிலிருந்து நிந்தவூருக்கு இரண்டு லொறிகளில் எருமை மாடுகளை ஏற்றி வந்த போதே இந்நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று- கல்முனை பிரதான வீதியில் வைத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் குழுக்கள், மாடுகள் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை சோதனையிட்டுள்ளனர்;.

இதன்போதே, எருமை மாடுகள் நெரிசலாகவும், கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் கொண்டு செல்லப்பட்டதை அவதானித்த பொலிஸார், குறித்த நபர்களை கைது செய்ததோடு மாடுகளையும் லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நபர்கள் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் மாடுகள் காணாமல் போகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X