2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கர்ப்பிணி தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

Princiya Dixci   / 2015 மார்ச் 19 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கர்ப்பிணி தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் சத்துணவு வழங்கும் நிகழ்வும் பெரிய நீலாவணை கிளினிக் மத்திய நிலையத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றது.

கலாசார மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஐ.எல்.றிஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.சி.எம். பஸால் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.

கர்ப்பிணி தாய்மார்கள், கர்ப்ப காலம் முதல் குழந்தை கிடைக்கும் காலம் வரை கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்கள், சுகாதார நடவடிக்கைகள் மற்றும் வைத்திய சோதனை முறைகள் பற்றிய விளக்கங்கள் ஆகியன இதன்போது வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X