2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தரம் 05 மாணவர்களின் கைவினைப் பொருள் கண்காட்சி

Princiya Dixci   / 2015 மார்ச் 19 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட அல்-இக்றஃ வித்தியால மாணவர்களின் ஆக்கத்திலான கைவினைப் பொருட் கண்காட்சி புதன்கிழமை (18) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி மசூதா அஸ்ஹர் தலைமையில் இந்த கைவினைப் பொருட் கண்காட்சி நடைபெற்றது.

பிள்ளை நேய பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ள இப்பாடசாலையானது அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் முன்மாதிரியானதொரு பாடசாலையாக அமைந்துள்ளதுடன் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஏற்ற அகப்புறச் சூழலையும் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.உவைஸ், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸிம், கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.கஸ்ஸாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X