Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மார்ச் 19 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (19) தொடர்கின்றது.
ஊழியர்களது சம்பள நிலுவை முற்றாக வழங்கப்படும் என்று கடதாசி ஆலையின் தவிசாளரால் எழுத்து மூலம் உறுதியளிக்கப்பட்டும் வரை, உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படமாட்டாது என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுளோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (16) தங்களது நான்கு மாத சம்பள நிலுவையை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடதாசி ஆலை ஊழியர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை (17) தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் அடங்கலான குழுவினர் இன்று (19) ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து, சம்பள நிலுவை பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் இரண்டு தினங்களுக்குள் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
மேலும், பிரதியமைச்சர் அமிர் அலி அலைபேசி வாயிலாக அழைப்பினை ஏற்படுத்தி ஆர்பாட்டக்கார்களுடன் உரையாடியுள்ளார்.
ஆனால், தமது சம்பள நிலுவை வழங்கப்படும் என கடதாசி ஆலையின் தவிசாளரால் எழுத்து மூலம் உறுதியளிக்கப்படுமானால் மாத்திரமே தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாகவும் போராட்டத்தை ஊடகம் வாயிலாக வெளிக்கொண்டு வந்த ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
8 hours ago
8 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
03 Oct 2025