2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வு

Sudharshini   / 2015 மார்ச் 21 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவும் திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (20) பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 'பெண்களும் அவர்களது உரிமைகளும்' என்ற தொனிப்பொருளிலான சட்டத்தரணி அக்கிலாவின் சிறப்புரை இடம்பெற்றது.

தொடர்ந்து பங்குபற்றுனர்களது சார்பில் மகளிர் தினத்தின் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டதுடன், திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் கிராம மட்டங்களில் சிறப்பாக சமூக சேவையாற்றிய பெண்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், கிராமமட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.சிபாயா றமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், சட்டத்தரணி திருமதி.ஏ.எஸ்.ஆர்.அக்கிலா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரி.கிருபைராஜா, திவிநெகும பிரதேச உத்தியோகஸ்தர் கே.நேசராஜா, மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வை.உஜெயந்தன், ஆலையடிவேம்பு பிரதேச மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராமமட்ட திவிநெகும அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X