2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கடந்த கால கசப்பான விடயங்களை மறந்து ஐக்கியத்துடன் வாழ வேண்டும்: ஹாபீஸ்

Sudharshini   / 2015 மார்ச் 21 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து வாழ்வதை மேலும் வலுப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களை  மறந்து ஒருவருக்கொருவர் ஐக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் வாழவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை(20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்;.

இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றகையில்,

அனைத்து  கட்சிகளும் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸிலுள்ள ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சராக்கியுள்ளார்கள் என்றால் அது முஸ்லிம்களுக்கு கிடைத்த  கௌரவமாகும்.

கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் ஆகியோர் மும்மொழியும் அளவுக்கு நமது அரசியல் கலாசாரம் மாறியுள்ளது.

கிழக்கு மாகாண சபையில் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக சிறந்த அரசியல் கலாசார சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த இரண்டரை வருட காலம் நான் மாகாண அமைச்சராக இருந்து முஸ்லிம்களுக்கு மாத்திரம் சேவை செய்திருந்தால் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு என்னை முதலமைச்சராக்குவதுக்கு ஆதரவு வழங்கியிருக்காது.

ஒரு சில தனி நபர்களின் அரசியல் இலாபங்களுக்காக சமூகங்களைப் பிரிப்பதுக்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இன, மத வேறுபாடின்றி சேவையாற்றுகின்ற முதலமைச்சராக எமது முதலமைச்சுப்பதவி இருக்கும் என்பதை நான் கூறி வைக்க விரும்புகின்றேன் என அவர் nதிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X