2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் ஒற்றுமையை பலப்படுத்த முடியும்: ஹாபீஸ்

Sudharshini   / 2015 மார்ச் 21 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் இன வேறுபாடுகளின்றி ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் எமது மாகாணத்தில் ஒற்றுமையை பலப்படுத்த முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.  

கல்குடா கிராம சேவகர் பிரிவில் வலைவாடி கிராமத்தின் சிங்கள மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டம் கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணான்டோ தலைமையில் சனிக்கிழமை(21) இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் இன்று சந்தோசத்துடன் வாழ்வதை அவதானிக்க முடிகின்றது. அதிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சுதந்திரத்தை அனுபவிப்பதை அதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அந்த சுதந்திரம் நிறந்தரமாக இருக்க வேண்டும் என்பதுக்காக கிழக்கு மாகாண சபையிலுள்ள அனைவரும் உழைத்து வருகின்றோம்.

இன்று கிழக்கு மாகாண சபையில் சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக இணைந்து ஆட்சியை நடத்துகின்றோம். அதேபோன்று எமது மாகாணத்தில் உள்ள மக்களும் இன வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் எமது மாகாணத்தில் ஒற்றுமையை பலப்படுத்த முடியும் என வெர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X