2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 21 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.ரஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் தற்போது கடமையிலுள்ள வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை கண்டித்து, சனிக்கிழமை (21) அப்பகுதி மக்கள் வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த வைத்திய  அதிகாரியை இடமாற்ற வேண்டாமெனவும் அவரை தொடர்ந்தும் அதே வைத்தியசாலையில் கடமையாற்றுவதுக்கு ஆவணம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்

மேலும், தமது கோரிக்கை அடங்கிய மகஜரொன்றை கலமுனை பிராந்திய சுகாதார பணிப்பாளரிடம் கையளித்ததுடன் அதன் பிரதியை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கும் மத்திய அரசாங்க சுகாதார அமைச்சருக்கும் அனுப்பி வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X