2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஓய்வூதியர்கள் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

Thipaan   / 2015 மார்ச் 22 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

நிந்தவூர் அரச சேவை ஓய்வூதியர்கள் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்,  நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் சனிக்கிழமை (21) நடைபெற்றது.

இப் பொதுக்கூட்டம் அரச சேவை ஓய்வூதியர்கள் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஏ.எல்.ஏ. பஸீர் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், சுகாதார இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ரி. ஜப்பார் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து பொறியியல், வைத்திய பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் அதிதிகளால் ஞாபகச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X