2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சொறிக்கல்முனையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு

Kogilavani   / 2015 மார்ச் 23 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சொறிக்கல்முனை பிரதேசத்தில் நிலவி வரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் உறுதியளித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் பூர்வீக கிராமமான சொறிக்கல்முனை பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அப்பிரதேசத்துக்கு சனிக்கிழமை(21) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது அவர், திருச்சிலுவை திருத்தல பங்கு நிர்வாகி அருட்தந்தை ஆர்.திருச்செல்வம் அடிகளாரை சொறிக்கல்முனை பங்கு மனையில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

சொறிக்கல்முனை பிரசேத்துக்கு பஸ் சேவையை ஆரம்பித்தல், உப அஞ்சல் அலுவலகத்தை தரமுயத்துவதுடன் அஞ்சல் அலுவலத்திலேயே தபால் விநியோகப் பிரிவை ஆரம்பித்தல் போன்றவை தொடர்பாக இதன்போது

கலந்துரையாடப்பட்டதுடன் இவை அனைத்துக்கும் உடனயாக தீர்வை பெற்றுத்தருவதாக உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் உறுதியளித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.சுதர்சன், சம்மாந்துறை அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரி எம்.எம்.யுனைதீன், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம் உள்ளிட்;ட குழுவினரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X