2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்கான உத்தரவாத சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 மார்ச் 23 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

நற்பிட்டிமுனை பிரதேசத்தில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவச குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்கான முதற்கட்ட நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீட உறுப்பினருமான றஹ்மத் மன்சூரின் வேண்டுகோளின் பேரில்,  அல்-ஹிம்மா நிறுவனத்தினால் இந்த குடிநீர் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்கான உத்தரவாத சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

டாக்டர் எம்.இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக அல்-ஹிம்மா நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் எச்.எம்.எம்.ஜாபீர், செயலாளர் ஐ.எம்.றிஸ்வின், வெளிக்கள உத்தியோகஸ்தர் எம்.ஐ.எம்.நவாஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.சாலித்தின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X