2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சிறந்த சித்திகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Sudharshini   / 2015 மார்ச் 23 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றி அனைத்துப் பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களை பாராட்டி  கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) அக்கரைப்பற்று அஷ்-ஷிராஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றி கடந்த வருடம் சித்தியடைந்த மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அக்கரைப்பற்று கிளை, இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
மேற்படி அமைப்பின் அக்கரைப்பற்றுக் கிளைத் தலைவர் எம்.ஐ.எம். றபீக் தலமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில், அரசியல் பிரமுகரும் தொழிலதிபருமான எம்.என்.எம். நபீல், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தேசிய தலைவர் எம்.ஐ. உதுமாலெப்பை உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X