2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

100 நாட்கள் வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள்

Princiya Dixci   / 2015 மார்ச் 23 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் 100 நாட்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

100 நாட்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 36,822 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் பிரகாரம் ஒலுவில், பாலமுனை அட்டாளைச்சேனை, தீகவாபி போன்ற கிராமங்களிலேயே இந்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக பாலமுனை பிரதேசத்தில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சால் விஷேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல், பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

கிராம மட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் மற்றும் வறுமையை இல்லாதொழிப்பதற்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இவ்வேலைத்திட்டத்துக்காக ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் ரூபாய் சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன் இந்நிதியின் மூலம் பொது உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கிராமப்புற அபிவிருத்தி மற்றும் சிறு நீர்ப்பாசன அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபாவின் பணிப்புரைக்கமைவாக நடைபெற்ற இக்கலந்துரையாலில் பிரதேச அரசியல் பிரதிநிதிகள், பாலமுனை கிராமத்தின் 6 பிரிவுகளின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி மற்றும் கிராம உத்தியோகஸ்தர்கள், கிரமத்திலுள்ள அரச உத்தியோகஸ்தர்கள், கிராம மட்ட சமூகசேவை அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X