2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

குர்ஆன் மனன கலாசாலையின் நிர்மாண வேலைத்திட்டம் பார்வையிடப்பட்டது

Thipaan   / 2015 மார்ச் 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குர்ஆன் மனனக் கலாசாலையின்  நிர்மாண வேலைத்திட்டத்தை உள்நாட்டு போக்குவரத்து பிரதியமைச்சரின்  மக்கள் தொடர்பு அதிகாரியும்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினருமான  ஐ.எல்.எம். மாஹிர், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சென்று  (22)
பார்வையிட்டார்.

பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு  சிறந்த மார்க்க  கல்வியை வழங்கும்  நோக்கிலேயே இந்த மனன கலாசாலை அமைக்கப்பட்டுவருகிறது.  

சம்மாந்துறை பலர் பாடசாலை ஒன்றியத்தின் தலைவர் எம்.எம்.ஜுனைதீன், சம்மாந்துறை மாஹிர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம், உள்ளிட்ட குழுவினரும் சென்றிருந்தனர்.

கட்டட நிர்மாண வேலைத்திட்டத்தை  தூரிதப்படுத்துமாறு, ஒப்பந்தக்காரரிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் பணிப்புரை விடுத்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X