2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஐ.நா. விசாரணை குழுவே வேண்டும் என ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2015 மார்ச் 23 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத்தில் வலிந்து காணாமற் போனவர்கள் தொடர்பாக ஏமாற்றும் உள்ளக விசாரணை வேண்டாம் ஐ.நா அனுசரனையிலான விசாரணைக் குழுவே வேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (23) கவனயீர்ப்பு போராட்டத்தில்; ஈடுபட்டனர்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திகன் முன்னால்; அமைதியான பேரணியுடன் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கல்முனை மாணவர் மீட்பு பேரவையும் அம்பாறை மாவட்ட காணாமற் போனோர் சங்கமும் அழைப்பு விடுத்திருந்தன.

கல்முனை நகர உடையார் வீதி பிள்ளையார் ஆலயத்தின் முன்னபாக இருந்தும் கல்முனை- மட்டக்களப்பு வீதியிலுள்ள பற்றிமாக் கல்லூரிக்கு முன்பாக இருந்தும் இரு பகுதிகளாக காணாமற் போனவர்களின் உறவுகள், இன்று காலை 9 மணியளவில் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோர், அரசே எமக்கு பதில் தாருங்கள், என் கணவனை என்னிடம் ஒப்படையுங்கள், பக்கசார்பற்ற நீதி தேவை, போன்ற பல வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன் காணாமல் போனவர்களின் புகைப்படங்களையும் வைத்திருந்தனர்.

இரு பேரணிகளும் கல்முனை தமிழ் பிரதேச செயலக்தின் முன்னால் ஒன்றினைந்து அமைதியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் போரட்டத்தில் கிறிஸ்தவ மற்றும் இந்து மதகுருமார்கள், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச புத்திஜீவிகள் கலந்து கொண்டனர்.   

இதனையடுத்து கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ரி.கலையரசன், மு.இராஜேஸ்வரன் ஆகியோரிடம் காணாமல் போனோரின் உறவினர்கள் மகஜரை கையளித்த பின்பு தமது கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X