2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

டெங்கு ஒழிப்பு சிரமதான வாரம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2015 மார்ச் 24 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ், எம்.எஸ்.எம்.ஹனிபா

டெங்கு ஒழிப்பு சிரமதான வாரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (23) சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சம்மாந்துறை கல்லரச்சல் பிரதேசத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கலந்துகொண்டு, சிரமதானத்தை ஆரம்பித்து வைத்தார்.

சம்மாந்துறைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராமிய அபிவிருத்திச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஏ.ஹுசைன்தீன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X