2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காணிக்கச்சேரி

Thipaan   / 2015 மார்ச் 24 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

நீண்ட காலமாக காணி அனுமதிப்பத்திரம் இல்லாமல் குடியிருப்பவர்களுக்கு, காணி உத்தரவுப் பத்திரம் வழங்கும் பொருட்டு பாலமுனை 02ஆம் பிரிவு பல்தேவைக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை(24) காணிக் கச்சேரி நடைபெற்றது.

அரசின் 100 நாட்கள் விசேட அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை கிராமத்திலுள்ளவர்களுக்கே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

சின்னப் பாலமுனை, பாலமுனை, உதுமாபுரம் ஆகிய பிரதேசங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரி. அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ஏ.டபிள்யூ. ஹமீஸ், கிராம சேவகர்களான எம்.ஏ. ஜாபிர், எம்.எஸ். இப்றாஹிம், ஏ. பர்வின், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். தம்ஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X