2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மார்ச் 24 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பகுதியில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப் பொதிகள் இன்று செவ்வாய்க்கிழமை(24) கையளிக்கப்பட்டன.

இதன்போது, 50 தாய்மாருக்கு உணவு பொதிகள் கையளிக்கப்பட்டன

இந்நிகழ்வு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரியா தலைமையில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன், தாய்,சேய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சி.எம்.பஸால், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் வி.புவிதராஜன் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்துகொண்டு உணவுப் பொதிகளை தாய்மார்களிடம் கையளித்துள்ளார்.

இதன்போது 2000ஆம் ரூபாய் பெறுமதியான முதலாம் கட்ட உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X